வளாகம்

ஆண்டுத்திட்டம்

annai

வடிவமைப்பு
akaram Akaram

 

ஆசிரிய உறவுகளுக்கு
Monday, 23 August 2010

ஆசிரிய உறவுகளுக்கு
அன்பு வணக்கம்  !
பாடப் புத்தகப் பொதியோடு
பளிங்குப் பொம்மைகளாய்
மழலைத் தமிழ் மாணவர் குழாம்
மறுபடியும் உங்களிடம்…………
நாங்கள் ஊன்றிய
நாற்றுக்கள் தலைநிமிரும்
நாளைய பொழுதுகளில்,
எதிர் வரும் எம் இளவல்கள்
புலத்திலும் தமிழனாய்; பூத்தது கண்டு
நெஞ்சு நிறையாதா?   நீர்விழி கனக்காதா ?
நாடு நீங்கினும்-நாம்
நற்பணி செய்ததாய்
மனச் சாட்சி மகிழும் !

உறவுகளே…………………
கதியால் அரக்கியதற்கும்
காதலித்ததற்கும்
கந்தன் சந்நிதி நுழைந்ததற்கும்
கத்தியுருவிய பரம்பரை நாம்
எப்படி ?………….. எப்படி ? …………..
ஒரு சூரியத்தேவன்
துவைத்து உலர்த்திய குமுகாயத்தில்
அம்மணம் நீக்கி ஆடைகட்டினோம்.
சிதறினாலும் மொழிவளர்க்;கச் சேர்ந்தோம்.
தனித்தனி வர்ணங்களாய் இருந்தவர்கள்
வானவில்லாய் இணைந்தோம் !

வாருங்கள்
நம்பிக்கையோடு நகருவோம்.
மொழியும் பண்பாடும்
இழக்கப்பட முடியாதது
இழக்கப்பட கூடாதது.
நெஞ்சு நிமிர்த்தி நிறைவாய் பணிசெய்வோம்.
வேண்டுவதெல்லாம்
வேருக்கு நீர் !
                                                                                                  
 
                                                                        
                                  -வாழ்த்துக்களுடன்
 15.08.10                            சிவதாஸ் சிவபாலசிங்கம்
                                  (கல்விப்பணி மேலாளர்)